Jyothika Shares Chandramukhi Shooting Experience With Rajinikanth

Estimated read time 1 min read

2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்திருப்பார். அப்போது நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். 

சந்திரமுகி:

சுமார் 17 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்ற படம், சந்திரமுகி. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். நடிகை ஜோதிகா சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் கலக்கியிருப்பார். பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா, வினித் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். 

ஜோதிகா கொடுத்த விமர்சனம்..

சந்திரமுகி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது, நடிகை ஜோதியாவிடம் ஒரு பேப்பரை கொடுத்த ரஜினி இப்படத்தில் பிடித்த விஷயம் மற்றும் பிடிக்காத விஷயம் பற்றி எழுத கூறினாராம். “நாங்கள் அனைவரும் இப்படி எழுதி கொடுத்துள்ளோம், உங்களுக்கும் இது முதல் நாள் ஷூட்டிங் தானே, அதனால் நீங்களும் எழுதி கொடுக்க வேண்டும்” என்று ஜாேதிகாவிடம் கூறியிருக்கிறார் ரஜினி. ஜோதிகாவும் உடனே, முதல் நாள் ஷூட்டிங்கில் தனக்கு ஒரு வேலையை கொடுக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு எழுதி கொடுத்திருக்கிறார். அதில் பாசிடிவை விட நெகடிவை அதிகமாக எழுதி கொடுத்திருக்கிறார். உண்மையாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவர் அனைத்தையும் எழுதி இருக்கிறார். 

மேலும் படிக்க | சந்திரமுகி 2 படத்தில் அதிக சம்பளம் பெற்ற பிரபலம் யார்..? இதோ முழு விவரம்..!

வசமாக மாட்டி விட்ட ரஜினி..பி.வாசு கொடுத்த ரியாக்ஷன்..

ஜோதிகா எழுதிய அந்த விமர்சனம் நிறைந்த பேப்பரை வாங்கிய ரஜினி, அதை அப்படியே பி.வாசுவிடம் கொண்டு போய் கொடுத்து “பாருங்க சார், படத்தை பற்றி இவ்வளவு தப்பான பாய்ண்ட்ஸ்களை எழுதியிருக்காங்க..” என்று கூறியிருக்கிறார். பிறகுதான் ஜோதிகாவிற்கு தெரிந்திருக்கிறது, யாருமே அப்படி எழுதி கொடுக்கவில்லை தன்னிடம் ரஜினிகாந்த் விளையாடி இருக்கிறார் என்பது. 

இந்த பேப்பரை பார்த்த சந்திரமுகி படத்தின் இயக்குநர் பி.வாசு, வாயை இருக்கமாக வைத்துக்கொண்டு அப்படியே தன்னை பார்த்தாக ஜோதிகா அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சந்திரமுகி 2:

சந்திரமுகி படம் வெளியாகி 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தையும் பி.வாசுதான் இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், சந்திரமுகியின் முன்கதை மற்றும் வேட்டையன் ராஜாவின் முன்கதை ஆகியவை காண்பிக்கப்பட்டுள்ளது. முன்னர் வெளியான சந்திரமுகி படத்தை சைக்காலஜி த்ரில்லர் பாணியில் கொண்டு சென்றிருந்தனர். தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் பேய்களை காண்பித்துள்ளனர். அதுவும், ஒன்றிற்கு இரண்டு பேய்கள். படம், குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

ஜோதிகாவை மிஞ்சினாரா கங்கன..? 

சந்திரமுகி 2 படத்தின் ப்ரமோஷன்களின் போது, நடிகர் ராகவா லாரன்ஸ், “ஜோதிகா சந்திரமுகியாக நடித்தார், ஆனால் கங்கனா சந்திரமுகியாக மாறிவிட்டார்..” என்று குறிப்பிட்டார். இதையடுத்து படத்தில் கங்கனாவை சந்திரமுகியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அவரும், ரசிகர்களை ஏமாற்றாமல் நன்றாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், படத்தில் காமெடி எதுவும் வர்க்-அவுட் ஆகவில்லை என்றும் அவற்றில் சில காட்சிகள் கொஞ்சம் க்ரிஞ்சாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சந்திரமுகி 2 வசூல் விவரம்: ஒரே நாளில் இத்தனை கோடி கலக்‌ஷனா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours