சமீபத்தில் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறிய படம், மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தனர்.
மாமன்னன் திரைப்படம்:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியான படம் மாமன்னன். இது வரை தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வந்த வடிவேலு, இந்த படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக கலக்கினார். சாதிய அடக்குமுறை, அதில் இருக்கும் அரசியல், கொடூர தீண்டாமை போன்ற பல விஷயங்களை இந்த படத்தில் அலசியிருந்தனர். இந்த படம் வெளி வருவதற்கு முன்னர் மாரி செல்வராஜ் ‘தேவர் மகன்’ படம் குறித்து பேசியதால் மாமன்னன் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் படம் எதிர்பார்த்த வசூலை பெற்று வெற்றியை தேடி தந்தது.
மேலும் படிக்க | ‘மாமன்னன்’ படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் யார்..? முழு விவரம் இதோ..!
மீண்டும் இணையும் கூட்டணி!
மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த வடிவேலுவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் காமெடி படமாக உருவாக உள்ளதாகவும், இதனை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்‘ஹனுமன் கீர்’ என்ற படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது பகத் பாசிலுடன் பகத் பாசிலும் சேர்ந்து நடிக்க உள்ள படம் இதுதானா அல்லது வேறு படமா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த வருடம் (2024) இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலுவின் அடுத்தடுத்த படங்கள்..
கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர், வடிவேலு. சில வருடங்களுக்கு முன்பு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். இவர், கம்-பேக் கொடுத்த பிறகும் அந்த படங்கள் பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. மாமன்னன் படத்தால் இவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் முருகேசன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து, சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் காமெடியனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பகத் பாசிலின் படங்கள்:
ரசிகர்களால் செல்லமாக ‘நடிப்பு அரக்கன்’ என்று அழைக்கப்படுபவர், பகத் பாசில். இவர் நடிப்பில் வெளியான பல மலையாள படங்கள், வெற்றி பெற்றுள்ளன. தற்போது மாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் இவரும் ஒருவர். இவர், வேலைக்காரன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். இதையடுத்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களிலும் நடித்தார். தெலுங்கிலும் புஷ்பா:தி ரைஸ் படத்தில் வில்லனாக வந்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா:தி ரூல் படத்திலும் வில்லன் இவர்தான். அடுத்து சில மலையாள படங்களையும் இவர் கைவசம் வைத்துள்ளார்.
மேலும் படிக்க | மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours