Bigg Boss Tamil Season 7: மிரட்டும் ஹவுஸ்மேட்ஸ், ரகளைக்கு இரண்டு வீடு; இந்த சீசனில் என்ன நடக்கும்? | Bigg Boss Tamil Season 7: Contestants list and what to expect from this season?

Estimated read time 1 min read

டி.வி.சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் வந்த சில இளம் நடிகர்கள் மற்றும் நடிகையர்களுக்கும் வழக்கம் போல இந்த முறை பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஷ்ணு (ஆஃபிஸ், சத்யா), சரவணன் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), வினுஷா (பாரதி கண்ணம்மா), ரவீனா தாஹா (குக் வித் கோமாளி), நிவிஷா போன்ற பெயர்கள் ஏறத்தாழ உறுதியாகியிருக்கின்றன. மாடலிங் கேட்டகரியில் மூன் நிலா (மலேசியா) என்ற பெயர் டிக் ஆகியிருக்கிறது. இது தவிர முன்னாள் போட்டியாளர்களின் சிபாரிசுகளின் மூலமாகவும் சிலர் உள்ளே வருவதாகச் சொல்கிறார்கள். பாலாஜி முருகதாஸின் நண்பர் அனன்யா ராவ், அமீரைத் தத்தெடுத்து வளர்த்த குடும்பத்தைச் சேர்ந்த ஐஷூ போன்ற பெயர்கள் இப்போதைக்கு நமக்கு அந்நியமாக இருந்தாலும் வெகு விரைவில் பழக்கமாகி விடுவார்கள்.

இது தவிர டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், விஜய் டிவி ரக்ஷன், வீஜே பார்வதி, நகைச்சுவை நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட சில பெயர்கள் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. துவக்க நாளன்று யார், யாரெல்லாம் உறுதி என்கிற சஸ்பென்ஸ் முழுமையாக வெளிப்பட்டு விடும்.

ரவீனா தாஹா

ரவீனா தாஹா

பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஆணியா… இல்லையா?

ஒருவகையில் நானும் இதையேதான் சொல்கிறேன். பிக் பாஸ் என்பது அப்படியொன்றும் உன்னதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. சில தனிநபர்களின் அந்தரங்கத் தருணங்களை வணிகமாக்கும் நிகழ்ச்சிதான். மற்றவர்களின் அந்தரங்கங்களை ஒளிந்து பார்க்கும், வேவு பார்க்கும் குறுகுறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உண்டு. தனி மனிதனின் இத்தகைய வக்கிர உணர்வைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு தீனிபோடும் நிகழ்ச்சிதான் இது. எனவே இதைப் பார்க்காமலிருப்பதால் ஒன்றும் இழக்கப் போவதில்லை. இதை விடவும் உபயோகமான பொழுதுபோக்கு வாய்ப்புகள் நிச்சயம் இருக்கின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours