டொவினோ தாமஸிற்கு ஆசியாவின் சிறந்த நடிகர் விருது
29 செப், 2023 – 13:34 IST
உலக அளவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் ஒன்று நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் ‘செப்டிமியஸ்’ விருது. 2023ம் ஆண்டின் விருது விழா கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் நடந்தது. இதனை நெதர்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஆல்டர்மேன் டூரியா துவக்கி வைத்தார்.
ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. அந்த வரிசையில் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது மலையாள நடிகர் டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டது. இதனை அவர் நெதர்லாந்து நாட்டிற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.
முன்னனி மலையாள நடிகரான டொவினோ தாமஸ் தமிழில் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்தார். இவர் நடித்த ‘மின்னல் முரளி’ படமும், ‘2018’ படமும் பெரிய வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 2018 படம் 200 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்தது. இந்த படம்தான் தற்போது ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்ததாற்காகத்தான் ஆசியாவின் சிறந்த நடிகர் விருது டொவினோ தாமசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours