Swathi Reddy: விவாகரத்து குறித்த கேள்வி; நடிகை சுவாதி ரெட்டி அளித்த பதில் ! |actress swathi reddy talks about her divorce

Estimated read time 1 min read

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘போராளி’, ‘யாக்கை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.  2018 ஆம் ஆண்டு விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமீபத்தில் சுவாதி ரெட்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் புகைப்படத்தை நீக்கி இருந்தார்.

 'மந்த் ஆஃப் மது'

‘மந்த் ஆஃப் மது’

இதனையடுத்து தன் கணவரை சுவாதி விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இதுக்குறித்து சுவாதி ரெட்டி எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்நிலையில் சுவாதி  நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.  ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் ‘மந்த் ஆஃப் மது’  என்ற படத்தில் நடித்திருக்கிறார்.  இப்படத்தில் நவீன் சந்திரா, ஸ்ரேயா நாவிலே  ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின்  டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours