Kavin Next Movie Announcement With Director Mari Selvaraj | ஜெட் வேகத்தில் எகிறும் மார்க்கெட்.. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவின்

Estimated read time 1 min read

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க கவினிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் வைரலாகி வருகிறது.

நடிகர் கவின்:
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ‘லிஃப்ட்’ ஏறிய நடிகர்களுள் ஒருவர் கவின். ஆரம்பத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தொடர்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும் நடித்துவந்தார். அதன் பிறகு இவர் நாயகனாக நடித்திருந்த சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து பல இளம் பெண்களின் இதயங்களை கவர்ந்தார். அதன் பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை பெண்கள்-குறிப்பாக இளம் பெண்களின் மத்தியில் மட்டும் பிரபலமாகியிருந்த இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பல்வேறு வயது தரப்பிரனிடமும் ரீச் ஆனார். 

வெள்ளித்திரையில் கவின்:
நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்த போதே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். பிறகு, திரைப்படங்கிளில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். நேற்று இன்று நாளை, பீட்ஸா போன்ற படங்களில் சில மணித்துளிகள் வந்தாலும் ‘ஹே அது கவின்ல..’ என ரசிகர்களை சொல்ல வைத்தார். பின்னர் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது. இவர் முதன்முதலாக கதாநாயகனாக ‘லிஃப்ட்’ எனும் படத்தில் நடித்தார். ஹாரர் த்ரில்லர் படமாக உருவான இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற, அடுத்து இன்னொரு படத்திலும் நாயகனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘டாடா’ என்ற எமோஷனல் காதல் கதையில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி கவினை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுகொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | இதற்காக தான் லியோ ஆடியோ லான்ச் நடைபெறவில்லை! பரபரப்பு தகவல்!

மாரி செல்வராஜ் இயக்கதில் கவின்:
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கவினிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது, மேலும் துருவ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் படத்திற்குச் செல்வதற்குள் கவினை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கவின் கைவசம் 5 படங்கள்:
இதனிடையே தற்போது கவின் கைவசம் 5 திரைப்படங்கள் உள்ளது. அதன்படி தற்போது நடிகர் கவின் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்ற படத்தை முடித்திருக்கிறார். அதன் பின் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் கவின் தான் ஹீரோ என்று கூறப்படுகிறது. இது தவிர இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் கவின். இதன் தொடர்ச்சியாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் இவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

மேலும் படிக்க | லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை! திமுக அரசு தான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours