“அதைப் பத்தி பேச விரும்பல; உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன் பேக் டு சன் டிவி!” – சஞ்சீவ்| biggboss fame sanjeev doing a cameo role in sun tv serial

Estimated read time 1 min read

அவர் அந்தத் தொடருக்காக எவ்வளவு மெனக்கெட்டு நடிக்கிறார் என்பதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தாலே தெரிந்துவிடும். டப்பிங் ஆக இருக்கட்டும், சண்டைக் காட்சியாக இருக்கட்டும் அத்தனை மெனக்கெடுகிறார். அந்தத் தொடரில் நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான சஞ்சீவ் தற்போது கேமியோவாக நடிக்கிறார்.

`பிக்பாஸ்' சஞ்சீவ்

`பிக்பாஸ்’ சஞ்சீவ்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் சஞ்சீவ் கமிட் ஆன நெடுந்தொடர் `கிழக்கு வாசல்’. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்தத் தொடரில் ஆரம்பத்தில் கதாநாயகனாக சஞ்சீவ் தான் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். அந்தத் தொடருக்கான பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், திடீரென அந்தத் தொடரில் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக அவரிடம் பேசியபோது, `என்ன காரணம் என்பதை மீடியா முன்னாடி விளக்கமாக பேச விரும்பல. நடந்ததை மறந்துட்டு அடுத்ததா என்னன்னு பார்க்கணும். சீக்கிரமே அடுத்த புராஜெக்ட் இருக்கும்!’ எனக் கூறியிருந்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours