விஜய்யின் ‘லியோ’ படத்தின் 2-வது சிங்கிள் வியாழக்கிழமை ரிலீஸ் | vijay starrer leo Badass Second Single from tomorrow

Estimated read time 1 min read

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் இரண்டாவது பாடலான ‘Badass’ வியாழக்கிழமை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே, ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இசை வெளியீட்டு விழா நடைபெறாது என படக்குழு அறிவித்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours