தனது பேராசிரியரைச் சந்தித்தது சிலிர்ப்பாக இருந்ததாகவும் அவரது பிரார்த்தனைக்கு நன்றி எனவும் குறிப்பிட்டு, அவருடன் எடுத்த புகைப்படத்தைப் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தது ஹார்ட் ஃபுல் வைரல் ஆகிவருகிறது.
“யார் அந்த பேராசிரியர்?’ என ஆச்சர்யத்துடன் அவரைப் பற்றிய தேடல்கள் அதிகரித்து வரும் சூழலில், சூர்யாவின் வணிகவியல் பேராசிரியரும் துறைத்தலைவருமான எம்.ராபர்ட்டிடம் அந்தச் சந்திப்பு குறித்தும் அவரது பழைய நினைவுகள் குறித்தும் பேசினோம்.
“லயோலா காலேஜ்ல காமர்ஸ் துறைத் தலைவரா இருந்தேன். என்கிட்ட எத்தனையோ பிரபலங்களோட பிள்ளைங்க படிச்சிருக்காங்க. ஆனா, அதுல சூர்யா எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்தான். கடந்த 1992-1995 வரை சூர்யா என்கிட்ட படிச்சார். படிப்புல அவுட்ஸ்டாண்டிங்னு சொல்ல முடியாது. ஆனா, ரொம்ப ரொம்ப ஒழுக்கமான மாணவர். ஆசிரியர்களுக்கு அப்படியொரு மரியாதை கொடுப்பார். அவருக்கு ஃபைனான்ஸ் அக்கவுண்டிங், கார்ப்பரேட் அக்கவுண்ட்டிங், மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் வகுப்புகளை நான்தான் எடுத்தேன். கல்லூரியில் படிப்பதோடு என் வீட்டுக்கும் வந்து படிப்பார். சந்தேகங்களை ரொம்ப ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுப்பார்.
+ There are no comments
Add yours