மும்பை: தமிழில், முகமூடி, பீஸ்ட் படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர், நடிகர் சல்மான் கானை காதலித்து வருவதாகச் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. அதை அவர் மறுத்திருந்தார்.
இப்போது மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை அவர் காதலித்து வருவதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற விவரமோ, மற்ற தகவல்களோ வெளிவரவில்லை. இதை பூஹா ஹெக்டே தரப்பு உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன் கர்நாடக கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே காதலிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த வதந்தியை மறுத்திருந்தார் அவர்.
+ There are no comments
Add yours