ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமை சந்தித்து விட்டு சென்ற சேது ராம் வராமல் வீட்டுக்குள் வரமாட்டேன் என அடம்பிடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மகாலட்சுமி உங்கள விட என் மேல தானே அதிகமாக கோபமா இருக்கலாம் நான் கூப்பிட்டா எப்படி வருவான் என்று கேட்க எனக்கு அதெல்லாம் தெரியாது, ராம் வராம நான் வீட்டுக்குள்ள வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்க வேறு வழியில்லாமல் மகா மற்றும் அர்ச்சனா என இருவரும் ராம் சீதாவை தேடி செல்கின்றனர்.
மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்
கார் நுழையாத தெருவுக்குள் இறங்கி தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ராம் மற்றும் சீதாவை தேடுகின்றனர். இங்கே அர்ச்சனாவின் மகள் அதான் சித்தி போயிருக்காங்களே அவங்க கூட்டிட்டு வந்துடுவாங்க, நீங்க உள்ள வாங்க சாப்பிடுங்க என்று சொல்ல ராம் வராம எதுவும் செய்ய மாட்டேன் என உறுதியாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து இங்கு சீதாவின் தையல் மிஷின் சத்தம் கேட்டு ஒரு வழியாக வீட்டை கண்டுபிடிக்க சீதா அவர்களை உள்ளே கூப்பிட உள்ளதால் வரமாட்டோம் என வெளியே காத்திருக்கின்றனர். ராம் எங்கே என கேட்ட மளிகை சாமான் வாங்க போய் இருப்பதாக சீதா சொல்ல மகா ஷாக் ஆகிறாள். சீதா கூப்பிட்ட போது இவர்கள் வர மறுத்த நிலையில் வெளியே சிலர் இவர்கள் இருவரையும் கிண்டல் அடிக்க அர்ச்சனா உள்ள போயிடுவது தான் நல்லது என உள்ளே வர சீதா சேரை மறைத்து பாய் போட்டு உட்கார வைக்கிறாள்.
மகாலட்சுமி இவள இங்கேயே விட்டுட்டு ராமை மட்டும் கூட்டிட்டு போக வேண்டியது தான் என கணக்கு போட சீதா உங்க கணக்கு நிச்சயமா நடக்காது நீங்க எப்படி வேணா முயற்சி பண்ணி பாருங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். மகாலட்சுமி அதையும் பார்த்திடலாம் என சவால் விடுகிறாள். பிறகு ராம் வீட்டுக்கு வர சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்து இருக்காங்க என்று கேட்க சீதா சோபாவில் தான் உக்காருவாங்கலாம் என கோர்த்து விடுகிறாள். பிறகு மகா ராமு வீட்டுக்கு கூப்பிட ராம் நாங்கள் இரண்டு பேரும் இங்கு சந்தோஷமா தான் இருக்கோம் வர முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | போட்டோஷூட் நடத்திய நடிகர் விஷால் – லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours