Captain Miller Overseas distributor is Gaint Lyca Productions: Release on December 15 | தனுஷின் கேப்டன் மில்லர்.. வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா, டிசம்பர் 15 ரிலீஸ்

Estimated read time 1 min read

பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் படம்: 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடம் இப்படத்தில் ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியதுடன், படத்தின்மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்தது.

மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்

கேப்டன் மில்லர் ரிலீஸ் எப்போது?
இந்நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி, கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுவே, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்றும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.

கேப்டன் மில்லர் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்:
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேப்டன் மில்லர் படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகள் பற்றிய கலக்கலான அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வழங்கியிருந்தார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்திருந்த பதிவில், 

“தழும்புகள் வருவதற்கு முன்பே நான் ஆயுதத்தை சுவைத்துவிட்டேன். என் பெயரைக் கேட்டால் பயப்படக் கற்றுக்கொள்வாய், உன் கண்கள் அதைப் பார்க்காது.

நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்

நீ படையா வந்தா சவ மழ குவியும்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்” என பதிவிட்டு இருந்தார்.

சுயாதீன இசைக்கலைஞரும் பாடலாசிரியருமான கேபர் வாசுகி இந்த வரிகளை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: மாயாவை விரட்டியடிக்க அன்னலட்சுமி போட்ட ஐடியா.. நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours