மலையாள இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்
25 செப், 2023 – 13:39 IST
1975ம் ஆண்டு வெளியான ‘ஸ்வப்னதானம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.ஜி.ஜார்ஜ். இப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கிய ‘ஊழ்க்கடல்'(1979), ‘மேளா'(1980), ‘யவனிகா'(1982), ‘லேகாயுடே மரணம் ஒரு ப்ளாஷ்பேக்'(1983) உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களை இயக்கினார். 9 கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளர். மலையாள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பை உருவாக்கினார். மலையாள இயக்குனர்களில் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்பட்டு வந்தார்.
77 வயதாகும் ஜார்ஜ் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி விட்டார். என்றாலும் மலையாள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் அவரை சந்தித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (செப்.24) கொச்சியில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours