Dhruva Natchathiram: 2016-ல் தொடங்கிய கௌதமின் உழைப்பு; நீண்ட நாள் காத்திருப்பு; தயாராகும் விக்ரம்! |article about Dhruva Natchathiram movie update

Estimated read time 1 min read

நாட்டுக்காக தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேலை பார்க்கிற‌ பத்துப் பேரின் உலகத்தில் ரசிகர்களை அழைத்துப் போகிற பயணம் தான் இந்தப் படம். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியா என இதுவரை யாரும் செல்லாத இடங்களுக்கும் சென்று படமாக்கியிருந்தார். 2016ன் கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட படம். இப்போதுதான் அதற்கு உயிர் வந்திருக்கு. முக்கால்வாசி படம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. பத்து நாட்கள் ஷுட்டிங்கிற்காக கால்ஷீட் என காத்திருந்தபோதுதான் நிறைய பிரச்சனைகள். ஓவர் பட்ஜெட் ஆகிவிட்டது என்றார்கள்.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

பெரிய யூனிட்டை நிறைய நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போய் அதிகப்படியான நாட்கள் தங்கியிருந்தது என செலவு அதிகமானது. தயாரிப்பாளரிடமிருந்து  first copy அடிப்படையில் தயாரித்தார் கௌதம். படத்தின் பிரமாண்டத்திற்காகவும், சண்டைக்காட்சிகளின் வித்தியாசத்தன்மைக்காகவும், படத்தின் கூர்மைக்காகவும் நல்லபடியாக தாராளமாக செலவு செய்தார். ஆனால் செலவு கைமீறிப்  போய்விட்டது. படத்தை முடித்துக் கொடுக்கும் வேலையில் பணத்தேவைக்கு சிரமம் ஆகிவிட்டது. அந்த சமயம் கொரோனா காலம் தொடங்கிவிட்டது. இயக்குநரால் பணத்தைப் புரட்ட முடியாமலும், நடிகர்கள் வேறு படங்களுக்கும் சென்று விட்டதால் அப்படியே நின்றது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours