மொழி தெரியாமல் இந்தி படம் இயக்குவதில் உள்ள சிரமங்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு, ‘ஒரு படத்தை இயக்க மொழி பெரிய தடையில்லை என நினைக்கிறேன். இந்தியே தெரியாமல் நான் பல இந்தி பாடல்களை முணுமுணுத்திருக்கிறேன். டைட்டானிக் பார்க்கும் போது எனக்கு ஆங்கிலமும் தெரியாது. ஆனால், அவற்றையெல்லாம் ரசிக்க முடிந்தது. இது இயற்கை. எங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொண்டு எமோஷனை சரியாக கடத்தும் வகையில் வசனங்களை தீர்மானித்துக் கொள்வோம்.அதனால்
ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்த சம்பவத்தைப் பற்றி விவரித்த அட்லீ, ‘ஸ்டண்ட் இயக்குனர் ஸ்பைரோ அவருடைய நண்பர்களான முக்கிய இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் படம் பார்த்திருக்கிறார். படத்தில் நெடுஞ்சாலையில் ட்ரக்குகளை பைக்கை வைத்து ஷாருக் சேஸ் செய்வதைப் போல சண்டைக் காட்சி ஒன்று இருக்கும். ஷாருக்கின் பைக் டயரிலிருந்து நெருப்புப் பொறிகளெல்லாம் பறக்கும்.அந்தக் காட்சியை பார்த்துவிட்டு ஸ்பைரோவின் நண்பர்கள் சிலர், இந்த ஸ்டண்ட் உங்களுடையதா இயக்குனருடையதா என கேட்க, ஸ்பைரோ என்னைப் பற்றி கூறி அந்த ஸ்டண்ட் ஐடியா இயக்குனரான என்னுடையதுதான் என கூறியிருக்கிறார். உடனே அங்கிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
அட்லீ குறிப்பிடும் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்பைரோ ‘கேப்டன் அமெரிக்கா’ ‘வெனாம்’ போன்ற படங்களிலெல்லாம் வேலை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்ற அட்லீ அடுத்ததாக ஹாலிவுட்டிற்கு சென்றால் யாரை வைத்து படம் இயக்குவார் உங்கள் சாய்ஸை கமென்ட்டில் பதிவிடுங்கள்.
+ There are no comments
Add yours