Jawan Reportedly Got A Call From Hollywood After Jawan Release

Estimated read time 1 min read

ராஜா ராணி படத்தில் அறிமுகமாகி தற்போது ஜவான் படம் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள இயக்குநர் அட்லீ. இவர், அடுத்து ஹாலிவுட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜவான் திரைப்படம்..! 

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர், ஷாருக்கான். இவரை வைத்து அட்லீ இயக்கியிருந்த படம், ஜவான். கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக இந்த படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில், ஒரு வழியாக இந்த மாதம் 7ஆம் தேதி படம் வெளியானது. பாலிவுட் படமான ஜாவன் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கெளரி கான் வைத்துள்ள ரெட் சில்லீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தது. ஜவான் திரைப்படம் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஹாலிவுட்டிற்குள் நுழையும் அட்லீ..? 

இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு படு பிசியாக பல சேனல்களில் நடக்கும் நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில், ஜவான் பட ரிலீஸிற்கு பிறகு தனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததாக அவர் கூறியுள்ளார். 

ஜவான் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளின் இயக்குநராக இருந்தவர், ஸ்பீரோ ரேசாட்ஸ். இவர், உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் இயக்குநர் ஆவார். ஜவான் படத்தில் பைக்கில் தீப்பொறி பரப்பது போன்ற ஒரு ஆக்ஷன் காட்சி இடம் பெற்றிருக்கும். இது ரசிகர்கள் பலரால் பாராட்டப்பட்டது. இந்த காட்சியை இவ்வாறு அமைக்க சொல்லி கூறியது அட்லீ. இதை பார்த்த ஸ்பீரோவின் ஹாலிவுட் நண்பர்கள், இந்த காட்சியை பாராட்டி அட்லீக்கு போன் செய்ததாக அவரே தனது நேர்காணலில் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளம் இவ்வளவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஆங்கில படம் இயக்க வாய்ப்பிருக்கா..? 

அட்லீ, தனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் பலர், அவர் ஹாலிவுட்டில் இருந்து படம் இயக்க அழைப்பு வந்ததாக நினைத்து கொண்டனர். இதனால், அவர் ஹாலிவுட்டிற்கு சென்று படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் தகவல்களை பரப்பி வருகின்றனர். அட்லீ, தான் ஹாலிவுட்டில் படம் இயக்க உள்ளதைதான் இவ்வாறு ஹிண்ட் கொடுத்து கூறியுள்ளாரோ என ரசிகர்கள் கருதுகின்றனர். 

1000 கோடியை நெருங்கும் ஜவான்..! 

ஜவான் திரைப்படம், சுமார் 300 கோடி அளவில் உருவானது. இந்த படம், முதல் நாளிலேயே உலகளவில் சுமார் 80 கோடி வரை கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. படம் வெளியாகி 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது வரை படம் 980 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படம் விரைவிலேயே 1000 கோடி வசூலை தொட்டு விடும் என்றும் கூறப்படுகிறது. 

விஜய்-ஷாருக்கானை வைத்து மாஸ்டர் ப்ளான் செய்த அட்லீ..

நடிகர் விஜய், ஜவான் திரைப்படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அவர் கேமியோ ரோலில் நடிக்க வில்லை. விஜய்யை நடிக்க வைக்காதது ஏன் என்று அட்லீயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஷாருக்கானையும் விஜய்யையும் ஒன்றாக நடிக்க வைப்பது என்றால், அதற்காக தனியாக ஒரு கதையை தான் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால், இவர்களை விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து அட்லீ எதிர்காலத்தில் படம் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | “தற்கொலை குறித்து நானும் யோசித்து இருக்கிறேன்..” கமல்ஹாசன் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours