Mark Antony: “ஒரு நல்ல நடிகனாகப் பல வருடமாகப் போராடி வருகிறேன். ஆனால்…” – S.J.சூர்யா உருக்கம் | Actor S.J. Surya Speech at Mark Antony Success Meet

Estimated read time 1 min read

‘இறைவி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மாநாடு’ என எஸ்.ஜே.சூர்யா, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார். அவ்வகையில் இப்படத்திலும் அசத்தியிருந்தார். இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றிருந்தது.

இவ்விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, தான் ஒரு நல்ல நடிகனாவதற்காகப் பல வருடங்கள் போராடியது பற்றியும், மீண்டு வந்த தனது திரைப்பயணம் குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், இப்படத்தில் ‘விஷாலை விடவும் எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்ற விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

'மார்க் ஆண்டனி' வெற்றி விழா

‘மார்க் ஆண்டனி’ வெற்றி விழா

இது பற்றிப் பேசிய அவர், “வசூல், பாராட்டுகள், நல்ல விமர்சனங்களை எல்லாம் தாண்டி இப்படம் ‘எல்லோரையும் கவலைகளை மறந்து மனசு விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறது’ என்பதுதான் எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஷால் சார் உங்களிடம் ஒரு வேண்டுகோள். நாம் இருவரும் சேர்ந்து இனி இரண்டு படங்கள் பண்ணலாம், இல்லை 20 படங்கள்கூட பண்ணலாம். ஆனால், நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதும் இருக்க வேண்டும். பலரும் பேசும் அவதூறான பேச்சுகளால் நம்முடைய இந்த உணர்வும், உறவும் மிஸ் ஆகிவிடக்கூடாது என்று உங்களிடம் அன்புடன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இவ்வளவு பெரிய ஸ்கீரின் ஸ்பேஸ் தந்த உங்களின் பரந்த அன்பான மனதைப் பார்க்கும் போது ‘இவன்தான்டா ஹீரோ…’ என்று சொல்லத் தோன்றுகிறது” என்று கூறினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours