பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தற்போது வெப் சீரிஸ், டிவி நிகழ்ச்சி, திரைப்படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் திருநங்கையாக நடித்துள்ள ’தாலி’ என்ற வெப்சீரிஸ் வரும் 15-ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
சுஷ்மிதா சென்னுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சையும் எடுத்துக் கொண்டுள்ளார். நடிப்பில் இருந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பிரேக் எடுத்துக்கொண்டது குறித்தும், ஒடிடி தளம் திரைப்படத்துறையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறித்தும், ’தாலி’ வெப் சீரிஸில் திருநங்கையாக நடித்த அனுபவம் குறித்தும் நடிகை சுஷ்மிதா சென் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் சின்னச் சின்ன விஷயங்களுக்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. திருநங்கைகள் பற்றிய `தாலி’ படம் தங்களுக்கு பலன் தரும் என்று தெரிந்தாலும், அதில் நடிக்க சிலர் தயங்குவார்கள். அதற்காக அவர்கள் மீது தவறு என்று நான் நினைக்கவில்லை.
நான் திருநங்கை சமுதாயத்திற்காக மட்டும் இந்த வெப்சீரிஸில் நடிக்கவில்லை. கெளரி சாவந்த் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு இத்தொடரில் நடித்தேன். அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்.
+ There are no comments
Add yours