விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் இன்று விடியற்காலை 3 மணி அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவல் அறிந்து மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours