Lokesh Kanagaraj: `என் ரசிகர் லோகேஷ்’ வியந்த கமல்; நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்!| “My fan Lokesh, I am proud to direct Rajini” – Kamal!

Estimated read time 1 min read

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸைக் கொடுத்திருக்கிறது. இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான 11வது ‘SIIMA’ தென்னிந்திய திரைப்பட விருது விழாவில் ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக திரிஷாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த விழா மேடையில் லோகேஷ் ரஜினியின் படத்தை இயக்கவிருப்பது குறித்து கமல் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

இதுபற்றி பேசிய கமல், “கமல் ரசிகரான லோகேஷ், ரஜினியின் படத்தை இயக்குவதா!? என்று பேசுகிறார்கள். காமன் ரசிகர்களுக்கு அவ்வளவுதான் தெரியும். ‘கமல் 50’ விழாவில் ‘என்னைப்போலவும் ரஜினியைப் போலவுமான ஒரு நட்பு இதுக்கு முன்னாடி தலைமுறையில் இல்லை. இனியும் இருக்கப்போவதில்லை’ என்று கூறினேன். இனிவரும் தலைமுறைக்கு “இனி யாரும் அப்படி இருக்க முடியாது’ என்ற அர்த்தத்தில் சவாலாக அதைக் கூறவில்லை.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours