சப்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர்?
16 செப், 2023 – 14:06 IST
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். நிறைய விளம்பர படங்களையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படத்தில் நடித்ததன் மூலம் ராஜீவ் மேனனுக்கு நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறதாம். அந்த வகையில், அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சப்தம்’. இதில் ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours