Ashok Selvan Talks About Fairness And Skin Color Keerthi Pandian

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவராக இருப்பவர், அசோக் செல்வன். இவர், சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். இவர் நிறும் குறித்து பேசியுள்ள நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. 

அசோக் செல்வன்:

கோலிவுட்டின் இளம் கதாநாயகர்களுள் ஒருவரான அசோக் செல்வன் தமிழ் மொழியில் குறிப்பிடத்தக்க சில வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறியவர். முதன்முதலில், அஜித் ஹீரோவாக நடித்திருந்த  ‘பில்லா 2’ படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.  2013ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் இவர், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதைத்தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து பல படங்கள் வரிசை காட்டியது.  பீட்சா-2 வில்லா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார், அதனை தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, 144, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் மொழிப்படங்கள் மட்டுமின்றி இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. 

திருமணம்..

நடிகர் அசோக் செல்வன், பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் கரம் பிடித்தார். இவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்மத்துடன் சொந்த ஊரில் வெகு சில உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொள்ள, எளிய முறையில் திருமணம் நடைப்பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது. இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கிள் உள்ளது. 

மேலும் படிக்க | டும் டும் டும்..! கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன் திருமண புகைப்படங்கள்!

கீர்த்தி பாண்டியனின் நிறத்தை கலாய்த்த நெட்டிசன்கள்..! 

தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து சில பெண்கள் அவரது கமெண்ட் செக்ஷனில் கதற அரம்பித்தனர். “வேறு நல்ல அழகான பெண்ணே கிடைக்கவில்லையா..” என்று கேட்டிருந்தனர். இதற்கு காரணம், பிற கதாநாயகிகள் போல இல்லாமல் கீர்த்தி பாண்டியன் நிறம் குறைவாக இருப்பார். கீர்த்தியின் நிறத்தை வைத்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்த நெட்டிசன்கள் அசோக் செல்வனுடன் திருமணம் ஆன புகைப்படங்களை பார்த்தவுடன் இதை ஒரு டாப்பிக்காக மாற்றியுள்ளனர். கீர்த்தி பாண்டியனின் நிறத்தை வைத்தும் பலர் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். 

நிறம் குறித்து பேசிய அசோக் செல்வன்..

அசோக் செல்வன், சினிமாவிற்கு வந்த புதிதில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, “உங்கள் அழகை நிறையாக பார்க்கிறீர்களா? குறையாக பார்ககிறீர்களா? என்று கேள்வியெழுப்பினார். அதற்கு அசோக் செல்வன், “அழக என்று எதை சொல்கிறீர்கள்..?” என்று கேட்டார். “வெள்ளையாக இருப்பதை..” என்று அந்த தொகுப்பாளினி கூறி முடிப்பதற்குள் “வெள்ளையாக இருந்தால் அழகா..?” என அடுத்தடுத்து கொஞ்சம் வேகமாக பேச ஆரம்பித்தார் அசோக் செல்வன்

அழகு என்றால் என்ன..? 

அந்த நேர்காணலில் அழகு என்றால் என்ன என்பது குறித்து அசோக் செல்வன் பேசியிருந்தார். “அழகு என்பது நம் மனதை பொருத்துதான் உள்ளது. வெள்ளையாக இருந்தால் ஒருவர் அழகு, கருப்பாக இருப்பதால் ஒருவர் அழகில்லை என்றெல்லாம் கிடையாது. அவையெல்லாம், பிரிட்டீஷ் ஆட்சியின் போது நம் மனதில் விதைத்த எண்ணங்கள். அப்போது பலர் வெள்ளையாக இருப்பவர்களை பார்த்து ‘வணக்கம் துரை’ என்று கூறுவார்கள். அதன் பிறகு வந்த அழகு சாதன பொருட்களின் ப்ராண்டுகள், அழகு என்றால் வெள்ளை என நம் மனதில் விதைத்து விட்டன. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது..” என்று கூறினார். கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து பலவாரான கருத்துகள் இணையத்தில் எழுந்த நிலையில் இவ்வாறு அசோக் செல்வன் பேசியுள்ள நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | நயன் – விக்கி.. மகாலட்சுமி – ரவீந்தர்.. இப்ப அசோக் செல்வன் – கீர்த்தியா? திருந்துங்க பாஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours