சினிமா செய்திகள்: நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் வெளியானதுமே பலரும் கீர்த்தி பாண்டியனை விமர்சிக்க தொடங்கினர். இது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழில் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகம் ஆன அவர் ஓ மை கடவுளே, போர்தொழில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வளர்ந்து வரும் நடிகரான இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் கிரீன் சிக்னல் விழ, சில மாதங்களுக்கு முன்பு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருநெல்வேலியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமண புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது. பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படி ஒரு பக்கம் செல்ல, மற்றொரு பக்கம் கீர்த்தி பாண்டியனின் நிறத்தை வைத்து பலர் விமர்சிக்க தொடங்கினர். அசோக் செல்வனுக்கு இவரா மனைவி என கிண்டலும் எழத்தொடங்கியது.
மேலும் படிக்க – தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?
இதில் பெண்கள் சிலர் கீர்த்தி பாண்டியனின் திருமண புகைப்படங்களின் கீழ், வேறு பொண்ணே கிடைக்கவில்லையா எனவும், அருண்பாண்டியன் மகள் என்பதால் திருமணம் செய்து கொண்டீர்களா எனவும் கமெண்ட் செய்துள்ளனர். இதனைக்கண்ட நெட்டிசன்கள் அந்த பெண்களை விளாசி வருகின்றனர். இப்படி பாடி ஷேமிங் செய்வது கீழ்தரமான செயல் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடும் தமிழகத்தில் நிறத்தை வைத்து ஒரு பெண்ணை கிண்டல் செய்வது ஏற்புடையதல்ல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு முன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது நயன்தாராவின் பிரேக் அப் கதைகளை வைத்து அவரை விமர்சித்தனர். அதேபோல சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணத்தின் போதும் அவரது கணவர் ரவீந்தரை உருவ கேலி செய்தனர். மகாலட்சுமி, ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் பேசினர். இப்படிப்பட்ட பேச்சுக்கள் எப்போதும் சுலபமாக எழுந்து விடுகிறது. ஆனால் அந்த பிரபலங்கள் இந்த கமெண்டுகளால் எவ்வளவு பாதிக்கப்படுவர் என்பது பலரும் அறிவதில்லை என்கின்றனர் பிரபலங்களின் நண்பர்கள்.
மேலும் படிக்க – Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours