அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், இனிமேல் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செம்மலை எச்சரித்துள்ளார்.
செம்மலை எச்சரிக்கை
அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாக கொண்டாடத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுகவின் கட்சியும் சின்னமும் எடப்பாடி பழனிச்சாமி கைவசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. இனி யாரும் அதனை சொந்தம் கொண்ட முடியாது என்றார்.
சட்ட நடவடிக்கை பாயும்
அதிமுகவின் கொடியையும் சின்னத்தையோ யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது கட்சியின் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனி வலுவான கட்சியாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உருவெடுத்துள்ளது என்றார். இனியாவது கட்சியை பிளவு படுத்துகிற முட்டாள்தனமான வேலையில் ஓபிஎஸ் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், அவ்வாறு கொடியையும் கட்சியையும் பயன்படுத்தினால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் செம்மலை எச்சரித்தார். இனி அவர்கள் அந்த காரியத்தை செய்ய மாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
சசிகலாவுக்கும் அனுமதியில்லை
இதேபோல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.பி.எஸ் & சசிகலா உள்ளிட்ட எவரும் அனுமதியின்றி அதிமுக பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், மீறினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என்றும் கூறினார்.
பன்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்
ஓபிஎஸ் அணியில் இருக்கும் பன்ருட்டி ராமச்சந்திரன் இது குறித்து பேசும்போது, அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு அதிகாரமில்லை என தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுக கொடி சின்னம் பயன்படுத்துவதற்கு எந்த தடையுமில்லை என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours