விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ படத்தில் சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பாபு ஆண்டனி என பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என பல திரையுலகின் நட்சத்திரங்கள் இதில் கூட்டணி சேர்ந்துள்ளன. மேலும், இதில், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த தகவல் படக்குழுவினரால் உறுதிச்செய்யப்படவில்லை.
ஜோஜூ ஜார்ஜ், இந்தாண்டு வெளியான இராட்டா, துறைமுகம் ஆகிய படங்களின் மூலம் மலையாளம் மட்டுமின்றி பல்வேறு மொழி ரசிகர்களிடையேயும் பெரும் கவனத்தை பெற்றார். தற்போது அவர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | அடங்கேப்பா… ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!
மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘பாப்பன்’ படத்திற்கு பிறகு ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘ஆண்டனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜோஷி இயக்கிய ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் போன்றோர்கள்தான் இந்த ‘ஆண்டனி’ படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு.
#Antony (Malayalam)
Joju George, Nyla Usha, Chemban Vinod, Kalyani Priyadarshan.
Direction – Joshiy pic.twitter.com/QPwEPogw0r
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 14, 2023
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜோஜு ஜார்ஜ், ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் “பொரிஞ்சு மரியம் ஜோஸ்”. கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மீண்டும், ஜோஷி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஜோடி எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியது. இரட்டா படத்திற்கு பிறகு ஜோஜு ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா மற்றும் பூஜை விழா கொச்சி கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த படத்தின் கதையை ராஜேஷ் வர்மா எழுத, ஒளிப்பதிவு ரணதிவே செய்கிறார். படத்தொகுப்பு ஷ்யாம் சசிதரன், இசை ஜேக்ஸ் பிஜோய், கலை இயக்கம் திலீப்நாத், ஆடை வடிவமைப்பு பிரவீன் வர்மா ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.
மேலும் படிக்க | பாஜக பகை கட்சி கிடையாது ; ‘A படம்’ விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours