கள்ளக்குறிச்சி:
கலைஞர் நினைவு நாளை முன்னிட்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும்…
பிரஷ்க்கு பதிலாக “பேனாவைக்கொண்டு” முன்னாள் முதல்வர் கலைஞர் உருவத்தை வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் அசத்தல்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும், பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டியும் பிரஷ்க்கு பதிலாக வெறும் பேனாவைக்கொண்டு கலைஞர் உருவத்தை வரைந்தார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும், பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் மற்றும் கலைஞர் அவர்களின் எழுத்தாற்றலை போற்றும் விதமாகவும், பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பிரஸ் பயன்படுத்தாமல் வெறும் “பேனாவினாலேயே” நீர் வண்ணத்தில் பேனாவை நனைத்து, தொட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் உருவத்தை இருபத்தி எட்டு நிமிடங்களில் வரைந்தார்.
பொதுமக்கள் இந்த ஓவியத்தை பார்த்து ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
சு.செல்வம்
பகுதிநேர ஓவிய ஆசிரியர்
செல் – 8940292827
+ There are no comments
Add yours