சென்னை: காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2014ல் நடிகர் கார்த்தி, சம்ந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கடனாக பெற்றுள்ளார்.
கடனுக்காக லிங்குசாமி கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் லிங்குசாமி, விஷால், சூர்யா மற்றும் அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களை இயக்கிய அவர், செக் மோசடி வழக்கில் ஒன்றில் குற்றம்சாட்டபட்டு நீதிமன்றம் மூலம் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் 8 புதிய படங்கள்! முழு விவரம்!
நடிகர் கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து எண்ணி எழு நாள் படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்த லிங்குசாமி, தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் மூலம் பிவிவி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் 1.3 கோடி கடனாக பெற்றுள்ளார். இதன்பிறகு கடனை செலுத்தாத அவர், கடனுக்கு காசோலை ஒன்றை கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிவிவி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, லிங்குசாமி அந்த தொகையை செலுத்த ஒப்புக்கொண்டார். இருப்பினும், இயக்குனர் வழங்கிய காசோலை பவுன்ஸ் ஆனதால், நிறுவனம் இயக்குனர் மற்றும் அவரது சகோதரர் மீது காசோலை மோசடி வழக்கு பதிவு செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours