Reason Behind Kaavya Arivumani Left Pandian Stores Serial | இதற்காகத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விளக்கினேன் காவ்யா அறிவுமணி

Estimated read time 1 min read

திரைப்படங்களுக்கு எந்தளவு வரவேற்பு இருக்கிறதோ அதேயளவு வரவேற்பு சின்னத்திரை தொடர்களுக்கும் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.  தமிழ் சின்னத்திரையில் பல வெற்றிகரமான சீரியல்கள் உள்ளது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீரியல் ஃபேவரைட்டானதாக இருக்கும்.  அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ரசித்து பார்ப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்தில் டிஆர்பி-ல் உச்சத்தை தொட்ட முன்னணி சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று.  தமிழிலேயே உருவான இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது, தமிழில் நல்ல டிஆர்பியுடன் இன்னும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  

மேலும் படிக்க | விஜய்யின் வாழ்வில் மிக சிறப்பான நாள் இன்று… ஏன் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன்-தம்பிகளுக்கு இடையேயான உறவையும், கூட்டு குடும்பம் என்றால் எப்படி இருக்கும் மற்றும் எப்படி இருக்க வேண்டும் என்கிற கருவையும் மையமாக கொண்டுள்ளது. மம்மூட்டி, முரளி ஆகியோரது நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்திலுள்ள அண்ணன்-தம்பிகளின் கதை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.  ஒரு பக்கம் இந்த சீரியலை பல இல்லத்தரசிகள் விரும்பி பார்த்து வந்தாலும் நெட்டிசன்கள் பலரும் இந்த சீரியலை ஒருபக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்போது கதையில் வரும் அண்ணன்-தம்பிகள், இத்தனை வருஷம் சேர்ந்து கூட்டு குடும்பம் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று காட்டிவிட்டு இப்போது மனக்கசப்புடன் பிரிந்து இருக்கின்றனர். பிரிந்த அண்ணன்-தம்பிகள் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

இந்த சீரியலில் சின்னத்திரை நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாக நடித்திருந்தார்.  சித்ராவின் முல்லை கதாபாத்திரம் பலருக்கும் பிடித்தமானதாக இருந்து வந்த நிலையில் இவரது திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.  சித்ராவின் மரணத்திற்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் காவ்யா அறிவுமணி நடிக்க வந்தார்.  இவர் இந்த நாடகத்திலிருந்து தற்போது காவ்யா விலகிவிட்டார், அவருக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.  இந்நிலையில் பலரும் காவ்யா அறிவுமணி சீரியலை விட்டு ஏன் விலகினார் என்று கேள்வியெழுப்பி வந்த நிலையில், தான் சீரியலை விட்டு விலகியது குறித்து காவ்யா மனம் திறந்துள்ளார்.  

அவர் கூறுகையில், “நான் தொடரில் இருந்து விலகியது குறித்து பல வதந்திகள் வருகின்றன.  ஆனால் அதெல்லாம் உண்மையல்ல, உண்மை என்னவென்றால் அந்த நேரத்தில் எனக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்தது, எனக்கு வெள்ளித்திரையில் வரவேண்டும் என்பது பெரிய  கனவு.  அதனால் தான் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்.  நல்ல ரீச் கொடுத்துவிட்டு ஏன் வெளியேறினீர்கள் என்று எல்லா ரசிகர்களும் என்னை கேட்கிறார்கள்.  நான் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் தான் நடிக்கப் போகிறேன், எல்லாமே பெஸ்ட் தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | விடுதலை பார்ட் 2-க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! வெளியாவதில் சந்தேகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours