தமிழில் சில படங்களில் நடித்த நடிகை விசாகா சிங், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“டல் திவ்யா” விசாகா சிங்

1986 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பிறந்த விசாகா சிங் கல்லூரி படிப்பை முடித்த பிறகு சில விளம்பரங்களில் தோன்றினார். அதிலும் குறிப்பாக த்ரிஷா நடித்த “விவெல்” சோப் விளம்பரத்தில் “டல் திவ்யா.. இப்ப தூள் திவ்யா” என்னும் விளம்பரம் மூலம் விசாகா சிங் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் ஞானப்பாக்கம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழிலும், அதே ஆண்டில் ஹும்சே ஹை ஜஹான் என்ற இந்தி படத்திலும் அறிமுகமானார். இதற்கிடையில் ஹவுஸ்புல், அந்தராத்மா ஆகிய இரு கன்னட படங்கள், தி ஜீனியஸ் ஆஃப் பியூட்டி என்ற ஆங்கில படம் என வரிசையாக நடித்தாலும் விசாகா சிங்கிற்கு எந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

சந்தானம் படத்தில் ஹீரோயின்

இதனிடையே 2010 ஆம் ஆண்டு அசுதோசு குவாரேக்கரின் இயக்கத்தில் வெளியான கெலெயின் ஊம் சீ சான் சே என்ற இந்தி திரைப்படத்தில் அபிசேக் பச்சன் மற்றும் தீபிகா படுகோனேயுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில் நடித்தத்தற்காக பாராட்டைப் பெற்றார். இதன்பின்னர் தமிழில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சேது ஆகியோர் நடிப்பில் வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடம் பரீட்சையமானார். இதனையடுத்து தமிழில் வாலிப ராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய இரு படங்களிலும் நடித்தார்.

மருத்துவமனையில் அனுமதி

தற்போது பட வாய்ப்பு இல்லாததால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் விசாகா சிங் மருத்துமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், தனக்கு என்ன பிரச்சினை என குறிப்பிடவில்லை. அதேசமயம் வருகிற தமிழ் புத்தாண்டு, கோடை காலம் மகிழ்வான தருணங்களாக அமையட்டும்” என தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின் போதும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதாகவும் தெரிவித்துள்ளார்.அவரது பதிவைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் விரைவில் விசாகா சிங் பூரண உடல் நலம் பெற்று வரவேண்டும் எனவும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: Chinmayi On Dalailama: ‘சவுக்கடி தர வேண்டும்.. வெட்கப்படுங்கள்..’ தலாய்லாமா விவகாரத்தில் கொந்தளித்த சின்மயி..!

+ There are no comments
Add yours