22

மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் வெப்தொடர், ‘மை டியர் டயானா’. இதன் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். பி.கே.விஜய், கிரிதர் ராமகணேஷ் இணைந்து இயக்குகின்றனர். முக்கிய வேடங்களில் மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்ஷயா பிரேம்நாத், துரோஷினி நடிக்கின்றனர்.
வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய, குஹா கணேஷ் இசை அமைக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் உருவாகும் இத்தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மணிகண்ட ராஜேஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours