பாலிவுட் பிரபலம் ஷாஹித்கபூர் மற்றும் கிருத்தி சனோன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாஹ் எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர் ஷாஹித் கபூர் மற்றும் கிருத்தி சனோன். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜயன் நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தினை தினேஷ் விஜயன், ஜோதி தேஷ்பாண்டே, லக்ஷ்மன் உடேகர் தயாரித்துள்ளனர். இதுவரையில் பெயரிடப்படாத படத்தில் தர்மேந்திரா மற்றும் டிம்பிள் கபாடியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கபீர்சிங்:
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. போஸ்டரை கண்ட மக்கள், “இந்த போஸ்டர் கபீர் சிங் படத்தை நினைவுபடுத்துகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
ஷாஹித் கபூர் வரவிருக்கும் படங்கள் :
இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபரின் ஆக்ஷன் திரைப்படமான ப்ளடி டாடியில் தற்போது நடிகர் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது ஆனால் ரீலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் ஃபார்ஸி. திரில்லர் ஜானரில் உருவான இந்த வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார் ஷாஹித் கபூர். ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த வெப் சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியானது.
பரம சுந்தரியின் வரவிற்கும் படங்கள் :
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஷாஹித் கபூரும் ஒருவர். பத்மாவத் படத்தில் ரத்தன் சிங்காக நடித்தாலும், கபீர் சிங் படத்திற்கு பின்னரே, இந்தியா முழுவதும் பிரபலமானார். பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்துள்ளார் கணபத் திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் கிருத்தி சனோன். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அக்டோபர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர தபு மற்றும் கரீனா கபூருடன் தி க்ரூ படத்திலும், பிரபாஸ், சைஃப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்டோருடன் இணைந்து ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
எனவே ஷாஹித் கபூர் மற்றும் கிருத்தி சனோன் இருவருக்கும் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.
+ There are no comments
Add yours