4/6/2023 4:27:15 AM
சென்னை: தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ள பிரியன், தற்போது ஹீரோவாக நடித்து இயக்குனராக அறிமுகமாகும் ஹாரர் கலந்த கிரைம் திரில்லர் படம், ‘அரணம்’. தமிழ்த்திரைக்கூடம் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் வர்ஷா, லகுபரன், கீர்த்தனா நடிக்கின்றனர். நித்தின் கே.ராஜ், இ.ேஜ.நவ்ஷத் ஒளிப்பதிவு செய்கின்றனர். சாஜன் மாதவ் இசை அமைக்கிறார். பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா பாடல்கள் எழுதுகின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் பிரியன் கூறுகையில், ‘அரணம் என்றால், அரண்மனை மற்றும் கவசம் என்று பொருள். அமானுஷ்ய சக்தி பற்றிய கதை’ என்றார்.
+ There are no comments
Add yours