4/6/2023 4:33:46 AM
ஐதராபாத்: கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய பிறகு தமிழுக்கு வந்தார். கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’, விஜய் ஜோடியாக ‘வாரிசு’ ஆகிய படங்களில் நடித்த அவர், புதுப்படத்தில் நடிக்க 2 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டதால் ஓரம்கட்டப்பட்டார். இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற அவர், சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் திரைக்கு வந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவர் கன்னடத்தில் நடித்தபோது, தன்னுடன் ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை தீவிரமாக காதலித்தார்.
இதையடுத்து இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணத்துக்கு முன்பே பல்வேறு கட்டுப்பாடுகளை ரக்ஷித் ஷெட்டி விதித்ததால் மனம் நொந்துபோன ராஷ்மிகா, ‘இனி உங்கள் உறவே எனக்கு வேண்டாம். நாம் பிரிந்துவிடுவோம். இனி எந்த ஜென்மத்திலும் நான் உங்களுடன் இணைந்து நடிக்க மாட்டேன்’ என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு, திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டார். பிறகு நடக்க இருந்த திருமணத்தையும் ரத்து செய்துவிட்டார். தெலுங்கில் நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா ஆதரவுக்கரம் நீட்டினார். இருவரும் சேர்ந்து நடித்தபோது ஏற்பட்ட நட்பு காதலானது.
அவர்களை இணைத்து வெளியான கிசுகிசுக்களை இருவருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாகப் பழகி வந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறினார். சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்த போட்டோ மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. இச்சம்பவங்கள் அவர்களது காதலை உறுதி செய்வது போல் அமைந்தது. இந்நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டாவுடனான காதலை ராஷ்மிகா முறித்துக்கொண்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா சாய் நிவாஸ் மீது ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு படவுலகில் காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் அவர்கள் ஜோடி சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்தனர். விமான நிலையத்திலும் ராஷ்மிகா, பெல்லம்கொண்டா நிவாஸ் ஜோடியைப் பார்க்க முடிந்தது. தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வரும் பெல்லம்கொண்டா நிவாஸ், ராஷ்மிகாவுடனான காதலை எப்போது வெளியே அறிவிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
+ There are no comments
Add yours