தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது மிக வலுவான ஒன்றாகும். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திணிப்பிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. சமீபத்தில், ஆவின் தயிர் பாக்கெட்டில், ‘தஹி’ என இந்தி மொழியில் பெயரை குறிப்பிடும்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்று தரப்படுத்துதல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதற்கு உடனடியாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், அந்த அறிவிப்பு திரும்பி வாங்கப்பட்டு, அந்தெந்த மொழிகளிலேயே அச்சிட்ட அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இதுபோன்ற தென்னிந்தியாவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இதுவரையிலான ஆட்சியாளர்களை அதனையே தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தனர். மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அளவில் பெரும் எதிர்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
இருமொழிக்கொள்கையை கடைபிடிப்பதால், ஆங்கிலம், தமிழை தவிர இந்திக்கு பொது இடங்களில் இடமளிக்கக்கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து இதுதொடர்பான போராட்டத்தை முன்னெடுப்பதில் தீவிரமாக உள்ளனர்.
அந்த வகையில், சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்திய வார்த்தையை அழித்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மையால் அழித்துள்ளனர். இதனையொட்டி, ரயில்வே சட்டம் பிரிவு 166-இன்படி, ரயில்வே துறைக்கு சொந்தமான பெயர் பலகையை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் கடற்கரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
பறக்கும் ரயில் செல்லும், சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தின் ஐந்தாவது நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லையென்பதால், அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours