பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு
31 மார், 2023 – 14:18 IST
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பின் ஹாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்கிறார். ‛‛தனக்கு சரியான சினிமா பின்புலம் இல்லாததல் சில குறிப்பிட்ட நபர்கள் எனக்கு வாய்ப்பு கிடைக்கவிடாமல் தடுத்தனர். இதனால் தான் நான் ஹாலிவுட்டுக்கு வந்தேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பிரியங்கா. ஆனால் அவர் யாரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இந்த நிலையில் பிரியங்காவை துரத்தியது கரண் ஜோஹர் தான் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஹிந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர்தான் பிரியங்கா சோப்ராவுக்கு வாய்ப்புகள் கிடைக்க விடாமல் தடுத்தார். ஷாருக்கானுடன் பிரியங்கா சோப்ரா நெருக்கமாக பழகியதை அவரால் தாங்க முடியவில்லை. சிலர் கும்பலாக சேர்ந்து அவமானப்படுத்தி, சுயமாக வளர்ந்த பிரியங்கா சோப்ராவை இந்தியாவை விட்டு ஓடிப்போகும்படி செய்தனர்.
சினிமா பின்னணி இல்லாமல் திரைத்துறைக்கு வருபவர்களுக்கு கேடு செய்வதற்கு என்றே ஹிந்தி சினிமாவில் மாபியா கும்பல் செயல்படுகிறது. அவர்கள்தான் பிரியங்கா சோப்ராவை துன்புறுத்தினர். அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோர் சினிமா துறைக்கு வந்த காலங்களில் இதுபோன்ற நிலைமைகள் இல்லை என்றார்.
+ There are no comments
Add yours