வந்தியத்தேவனாக கமலை நடிக்க வைக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!
30 மார், 2023 – 13:28 IST
பொன்னியின் செல்வன் பாகம் 2 வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா பேசியபோது, பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்தவர்களில் நானும் ஒருவர். நான் 9-ஆம் வகுப்பு படிக்கும் போதே பொன்னியின் செல்வன் கதையை படித்துவிட்டேன். இந்த படத்தை எம்.ஜி.ஆர் படமாக எடுக்க விரும்பினார். என்னை இயக்குனராகவும், கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரை நடிக்க வைக்கவும் சொன்னார். குறிப்பாக கமலை வந்தியதேவன் கதாபாத்திரத்திலும், குந்தவை கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்க வைக்க கூறினார்.
அப்போது அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அது நடக்காமல் போனது. நல்ல வேலையாக நான் அந்த படத்தை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் சொதப்பியிருப்பேன் என்பதால் தான் கடவுள் இந்த படத்தை மணிரத்னத்தை எடுக்க வைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்தும் கதாபாத்திரங்களும் அழகாக உள்ளது. இதை பார்ப்பதற்கு கல்கி உயிரோடு இல்லை என கூறினார்.
அமைச்சர் துரைமுருகன் பேசியபோது : ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் 5 முறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். நான் கதையை படித்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றார். அப்போது, இப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என்றேன். அவர் எடுத்தே தீருவேன் என்றார். கதைகளை படமாக்குவது எளிது, காவியங்களை படமாக்குவது கடினம் என்று கூறினேன். யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குநர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் வேண்டாம் என்றேன். ஆனால், படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை என்றார்.
+ There are no comments
Add yours