“பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை” என படத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், “என்னைப்போல அழகாக தமிழ் பேசுபவர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் வாய்ப்பு கிடைப்பது மிகப் பெரிய விஷயம். அந்த சந்தோஷத்தில் நெஞ்சில் வாள் ஏந்தி வந்திருக்கிறேன். சராசரி ரசிகர்களைப்போல நானும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்காக காத்திருக்கிறேன்.
+ There are no comments
Add yours