‘ஏழு கடல் ஏழு மலை’ படத்துக்கு 90 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் | 90 minutes of graphics footage for ezhu kadal ezhu malai

Estimated read time 1 min read

நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிக்கும் படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. இதை, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ராம் இயக்கியுள்ளார். ‘மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது பரபரப்பாக நடந்து வருகின்றன. படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. முக்கியமான அந்தக் காட்சிகளுக்கான பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. அது முடிந்ததும் படம் வெளியாகும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours