3/26/2023 12:37:38 AM
சென்னை: ‘நான் வீடு திரும்பினால் வீட்டில் உள்ளவர்களின் காலில் விழுந்து வணங்குவேன். வீட்டுப் பணியாளர்களின் காலையும் தொட்டு வணங்குவேன்’ என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பழக்க வழக்கங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், ‘சிறிய விஷயங்கள் கூட எனக்கு முக்கியமானவை தான். நான் காலையில் எழுந்து எனது செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவேன்; தொடர்ந்து என் நண்பர்களை சந்திப்பேன். அது என்னுடைய நாளை மகிழ்ச்சியாக்கும். வார்த்தைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. வார்த்தைகளால் ஒரு நட்பை உருவாக்கவோ, அதனை முறியடிக்கவோ முடியும். அதனால்தான் யாராவது ஏதாவது சொன்னால் அதை நான் முக்கியமானதாக எடுத்துக்கொள்வேன். நான் என் டைரியில் மிகச் சிறிய விவரங்களை கூட விடாமல் பதிவு செய்வேன். எப்போது வீட்டிற்கு திரும்பினாலும், மரியாதை நிமித்தமாக வீட்டிலுள்ள அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்கும் பழக்கம் எனக்கு உண்டு. என் வீட்டுப் பணியாளரின் கால்களையும் தொட்டு வணங்குவேன். காரணம், நான் யாரையும் வேறுபடுத்தி பார்க்க விரும்பவில்லை. நான் எல்லோரையும் சமமாக மதிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours