லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் மகன் – மகள் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லவ் டுடே:

ஹை பட்ஜெட் படங்களின் மத்தியில் வெளியாகி கோலிவுட்டில் சென்ற ஆண்டு சர்ப்ரைஸ் பேக்கேஜாக அமைந்து ஹிட் அடித்த படம் இயக்குநர் பிரதீப் ரங்காநாதனின் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த இந்தப் படத்தில் நடிகை இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 150 கோடிகள் வரை வசூலை வாரிக்குவித்து சென்ற ஆண்டு மாபெரும் ஹிட் படமாக அமைந்ததுடன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சந்தர்ப்பவசத்தால் காதலர்கள் தங்கள் செல்ஃபோன்களை மாற்றிக் கொள்வதும் அதற்கு பின்னான விளைவுகளையும் காமெடி கலந்த காதல் படமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பாடல்களும் யுவன் இசையில் ஹிட் அடித்தன.

அமீர்கான் – ஸ்ரீதேவி வாரிசுகள்:

மேலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான லவ் டுடே படம் பிற மொழி ஆடியன்சையும், பாலிவுட் நடிகர்களையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியது. லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்கனவே எகிறியிருந்த நிலையில் தற்போது இதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத் கானும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூரும் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசுகள் மகிழ்ச்சி:

அமீர் கானின் மகன் ஜூனைத் கான் ஏற்கெனவே மகாராஜா எனும் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. லவ் டுடே ரீமேக் அவருக்கு இரண்டாவது படமாக அமையும்.

அதேபோல் இயக்குநர் ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் படத்தில் குஷி நடித்து வரும் நிலையில், அவருக்கும் இது இரண்டாவது படமாக அமையும்.

மேலும், நடிகை ஜான்வி கபூர் சூப்பர்ஹிட் மராட்டி மொழி காதல் படமான சாய்ராட் படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நிலையில், அக்கா வழியில் அவரது தங்கை குஷியும் சூப்பர்ஹிட் ரீமேக் படமான லவ் டுடே ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், லவ் டுடே பட ரீமேக்கிற்காக இருதரப்பினரும் முன்னதாக அணுகப்பட்டதாகவும், ஜூனைத் – குஷி இருவரும் தங்கள் கதாபாத்திரங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: Raghav Chadha – Parineeti Chopra dating : சம்திங் ராங்… பரினிதி சோப்ராவுடன் டேட்டிங் செய்யும் எம்.பி… ட்ரெண்டிங்காகும் ரைமிங் பதில்

+ There are no comments
Add yours