வேளச்சேரியில் உள்ள அவரைச் சந்தித்துப் பேசியபோது அவர் கூறியது…
”நான் நடிக்க வந்தப்ப பதிமூணு வயசு இருக்கும். முதன்முதலா ஒரு நாடகத்துல நடிச்சேன். அது இலங்கையில் தனி நாடு வேணும்னு கேட்டுப் போராடினாங்க இல்லையா, அதுக்கான காரணத்தை விளக்கி தமிழ்நாட்டுல எடுக்கப்பட்ட நாடகம். அப்பெல்லாம் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டுக்கு வந்து போயிட்டிருந்த காலம். எங்க வீட்டுலயுமே என்னுடைய அப்பா அவங்களுக்கு ஆதரவானவர்தான்.
ஆனா எனக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைப் பத்தியெல்லாம் தெரியாது. நாடகத்துல நடிக்கணும்னு சொல்லிக் கூட்டிட்டுப் போய் தி.நகரில் ஒரு இடத்துல வச்சுப் போட்டோ எடுத்தாங்க.
என்னைப் போட்டோ எடுத்தவர்தான் பிரபாகரன்னு எனக்கு அங்க போன பிறகுதான் தெரிஞ்சது. அந்த நாடகத்துல என்னுடன் சேர்ந்து நடிச்சவர் நடிகர் நாசர் சார்.
+ There are no comments
Add yours