நான் படைக்கப்பட்ட விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ – நடிகை இஷா கோபிகர் | I was asked to remove a mole from my face, Isha Koppikar said

Estimated read time 1 min read

பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் நரங், தமிழில் `என் சுவாச காற்றே’, `நெஞ்சினிலே’, `ஜோடி’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் பிரபலமாக அறியப்பட்டவர். 46 வயதான இவர், தற்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலையையும் சமமாகக் கையாண்டு வருவதோடு தினமும் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை.

இந்த நிலையில், `உங்கள் குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என சமீபத்திய பேட்டியில் இஷா பேசியிருப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது.

இஷா கோபிகர்

இஷா கோபிகர்

இந்தியா டைம்ஸ் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இப்போதெல்லாம் 20 வயது பெண்கள்கூட தங்களை அழகுபடுத்திக்கொள்ள அறுவைசிகிச்சைக்குச் செல்கிறார்கள். வயதானதைத் தாமதப்படுத்தும் முயற்சியில் பெண்கள் தங்கள் சருமத்தில் பயன்படுத்தும் அனைத்து விஷயங்களையும் பார்க்கும்போது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. உங்கள் குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours