இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மார்ச் 14 ஆம் தேதியான இன்று பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சஞ்சய் தத் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்தில் லோகேஷ் கனகராஜை மனம் நெகழ்ந்து வாழ்த்தியுள்ளார். அதில், என் சகோதாரா, மகனே உனக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலும் பல வெற்றிகளையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இப்போது போல் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இரு என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அவரின் இந்த அன்பான வார்த்தைகளால் உறைந்து போயிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
https://t.co/rbGMXzpyB4 pic.twitter.com/4rWuutKAfs
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2023
அதேபோல், தளபதி விஜய்யும் லோகேஷ் கனகராஜூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், சர்பிரைஸ் கிஃப்ட் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார். ஆனால், அதைப் பற்றி வெளியில் சொல்லாத லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எல்லாவற்றுக்கும் மிகப்பெரிய நன்றி விஜய் அண்ணா என கூறியிருக்கிறார். என்ன கிஃப்ட் கொடுத்தார் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருக்கிறது. லியோ படத்தின் புரோமோஷன்போது விஜய் கொடுத்த கிஃப்ட் குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
Thanx a lot @actorvijay na for everything pic.twitter.com/iSc31Xs9q1
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2023
இப்போது லோகேஷ் கனகராஜ் லியோ சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். மாஸ்டருக்கு பிறகு தளபதி விஜய் மற்றும் லோகேஷ் மீண்டும் வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளனர். இந்த படமும் லோகேஷ் யுனிவர்சில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மாநகரத்தில் தொடங்கி, கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடரும் அவரின் பட வரிசையில் லியோவும் இருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதி என அடித்து சொல்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
லியோ முதல் கட்ட சூட்டிங் முடிவடைந்து இரண்டாம் கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிஸ்கின் தன்னுடைய முழு காட்சிகளையும் நடித்து முடித்துவிட்டார். திரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சஞ்சய் தத்தும் இணைந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் செட்டுக்கு வந்ததை லியோ அப்டேட்டாக படக்குழு வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக லியோ சரவெடியாக வெடிக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது.
மேலும் படிக்க | டார்ச்சர் செய்த நாக சைதன்யா !கருக்கலைப்பு செய்தாரா சமந்தா? பிரபலம் வெளியிட்ட தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours