“ஆஸ்கர் விருதால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம்” – ராஜமெளலிக்கு சிரஞ்சீவி வாழ்த்து

Estimated read time 1 min read

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான விருதையும், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாக்குமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதை வென்றுள்ள நிலையில் அந்தந்த படக்குழுவினருக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விருதைக் குவித்த இந்திய படங்கள்:

உலக சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள். அந்த வகையில் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி தியேட்டரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டு நமது இந்திய திரையுலகம் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் அதற்கு காரணம் இந்திய திரைப்படங்களான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான விருதையும், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாக்குமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதை குவித்து சாதனை படைத்துள்ளது.

சிரஞ்சீவி வாழ்த்து:

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. சர்வதேச அளவில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் குவித்த இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை கைப்பற்றியதை தொடர்ந்து ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலிலும் இடம்பெற்றது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் என இரு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதை பெற்றது. பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், "ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் வென்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது மிகவும் அற்புதமானது. இதற்காக நான் பாடலாசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி, பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுஞ்சும், காலபைரவா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். நடனக் கலைஞர்கள் நடனமாடிய ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியருக்கும் எனது வாழ்த்துகள். ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த டாக்குமென்டரி குறும்படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதற்கு வாழ்த்துகள்.நீங்கள் அனைவரும் வரலாறு படைத்து நம் நெஞ்சங்கள் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளீர்கள்." என்று தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours