“கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே சான்று!”- ஆஸ்கர் வென்ற முதல் ஆசியப்பெண் மிச்செல் இயோவின் மெசேஜ் | Oscars 2023: Michelle Yeoh becomes 1st Asian woman to win Academy Award for Best Actress

Estimated read time 1 min read

95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். தீபிகா படுகோன், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டனர். ‘RRR’, ‘The Elephant Whisperers’ ஆகிய இரண்டு இந்தியப் படைப்புகள் ஆஸ்கர் விருதினை வென்றிருக்கிறது.

மிச்செல் இயோ

மிச்செல் இயோ

அவற்றையும் தாண்டி பல்வேறு படங்களும் விருதினை வென்றுள்ளது. பல கலைஞர்களும் விருதினை வென்று சாதித்திருக்கின்றனர். அந்த வகையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘Everything Everywhere All At Once’ திரைப்படத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த மிச்செல் இயோ வென்றிருக்கிறார். Police Story 3: Super Cop, The Heroic Trio, Tomorrow Never Dies, Crouching Tiger Hidden Dragon போன்ற படங்களில் நடித்து உலக அரங்கில் பல்வேறு ரசிகர்களைச் சேர்த்தவர் மிச்செல்.

கேட் பிளான்செட் ( Tár), அனா டி அர்மாஸ் (Blonde) ஆண்ட்ரியா ரைஸ்பரோ (To Leslie), மிச்செல் வில்லியம்ஸ் (The Fabelmans) ஆகியோரும் சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மிச்செல் இயோ இவ்விருதினை வென்றிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours