அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள டால்பி திரையரங்கில், 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் `எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)’ திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் மிச்செல் யோஹ் (Michelle Yeoh).
95 ஆண்டுக்கால ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் ஆசியப் பெண் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
மலேசியாவில் பிறந்து ஹாங்காங் அதிரடித் திரைப்பட உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் மிச்செல். இவர், க்ரூச்சிங் டைகர் (Crouching Tiger), ஹிடன் டிராகன் (Hidden Dragon) மற்றும் கிரேஸி ரிச் ஏசியன்ஸ் (Crazy Rich Asians) போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படம் டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் ஆகியோரால் எழுதி இயக்கப்பட்டது. இதில் `ஈவ்லின்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவே மிச்செலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours