Oscars 2023 : `நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதினை வெல்லும்! – இசையமைப்பாளர் கீரவாணி நம்பிக்கை | AR Rahman says ‘I want Naatu Naatu to win’ ahead of Oscars 2023: ‘I want them to win the Grammy also’

Estimated read time 1 min read

இதையடுத்து மார்ச் 13ம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விழாவில் `நாட்டு நாட்டு’ பாடல் விருதினை வெல்லுமா என்பதைக் காண திரையுலகினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இப்பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி, “எங்களின் `நாட்டு நாட்டு’ பாடல் மூன்று அமெரிக்க விருதுகளைப் பெற்றுள்ளது. அப்போது ஆஸ்கர் விருதினையும் சேர்த்து நாங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம் எனச் சொல்லிருக்கேன். இப்போது நாங்கள் அந்தத் தருணத்தின் அருகில் நின்றிருக்கிறோம். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். `நாட்டு நாட்டு’ ஆஸ்கர் விருதினை வெற்றிபெற தகுதியான பாடல்தான். ஒரு இசையமைப்பாளராக எனது திறமைகளை நான் அறிவேன். ஒவ்வொரு இசையமைப்பிலும் எவ்வளவு நல்லது, கெட்டது இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் `நாட்டு நாட்டு’ பாட்டுக்கு சிறப்பாக இசையமைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்றார்.

மேலும், “’நாட்டு நாட்டு’ பாடலைப் பாடிய கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் இருவரும் ‘நாட்டு நாட்டு’ பாடலை ஆஸ்கர் விழாவில் நேரடியாக பாடவுள்ளனர்” என்றார்.

இதுபற்றி பேசியுள்ள அவர், ” ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதினை மட்டுமல்ல கிராமி விருதையும் வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் நம்மில் எவருக்கும் வழங்கப்படும் எந்தவொரு விருதும் இந்தியாவை உயர்த்தும் மற்றும் நமது கலாசாரத்தின் செறிவை உயர்த்தும்” என்று கூறியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours