Actor Vijay LEO Movie Latest Update Actor Sanjay Dutt Joined Shooting And Vijay Warm Welcoming

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் யுனிவர்சின் முக்கிய பாகமாக, விக்ரம் படத்துடன் தொடர்புடைய விதமாக உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார்.

லியோவில் சஞ்சய்தத்:

லியோ படத்தில் ஏராளமான பட்டாளங்கள் குவிந்துள்ள நிலையில், கே.ஜி.எஃப். படத்தில் அதிரவாக மிரட்டிய சஞ்சய்தத் இந்த படத்திலும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், லியோ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது, காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் சஞ்சய் தத் காஷ்மீர் வந்துள்ளார். அவரை படக்குழுவினர் பூங்கொத்து அளித்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக அழைத்துச் சென்றனர். காரில் சென்று படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சஞ்சய் தத்தை நடிகர் விஜய் கார் அருகே சென்று கட்டியணைத்து வரவேற்றார்.  

பின்னர், விஜய் – சஞ்சய் தத் இருவரும் இணைந்து நீண்ட நேரம் பேசினர். அவர்களுடன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் உடனிருந்தார். சஞ்சய் தத் படப்பிடிப்பில் இணைந்ததை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் – சஞ்சய் தத் இருவரும் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

நட்சத்திர பட்டாளங்கள்:

நடிகர் விஜய் லியோவாக நடிக்கும் இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். மேலும், விக்ரம் படத்தின் தொடர்ச்சி என்பதால் நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தில் முக்கிய காட்சியில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

வாரிசு படம் வெளியான சில நாட்களிலே லியோ படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் தொடங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய  விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகுவதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது, ஏற்கனவே படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மிகுந்த  ஆர்வத்துடன் உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Oscars 2023: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கிறதா? எந்தெந்த பிரிவில் என்னென்ன படங்கள் வெல்லும்? – கணிப்புகள் சொல்வது இதுதான்…!

மேலும் படிக்க: Rajinikanth: ”சேகர் பாபு ரொம்ப அன்பானவர்.. அவருக்கு இன்னொரு முகம் இருக்கு.. பாட்ஷா மாதிரி” – ரஜினிகாந்த்

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours