63 வயதில் 4வது திருமணம் : நடிகை பவித்ராவை கரம்பிடித்த தெலுங்கு நடிகர் நரேஷ்

Estimated read time 1 min read

63 வயதில் 4வது திருமணம் : நடிகை பவித்ராவை கரம்பிடித்த தெலுங்கு நடிகர் நரேஷ்

11 மார், 2023 – 10:39 IST

எழுத்தின் அளவு:


Actor-Naresh-married-actress-Pavithra

நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனும், மறைந்த நடிகை விஜயநிர்மலாவின் மகனுமான நரேஷ்(63), நடிகை பவித்ரா(44) இருவரது திருணம் நடைபெற்றுள்ளது. திருமண வீடியோவைப் பகிர்ந்து, “எங்களின் இந்தப் புதிய பயணத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் ஆசீர்வாதங்களைக் கேட்கிறோம். ஒரு புனிதமான பிணைப்பு, இரண்டு மனங்கள், மூன்று முட்கள், ஏழு படிகள், உங்கள் ஆசீர்வாதங்களைக் கேட்கிறேன்- பவித்ரா நரேஷ்,” என சேர்ந்து பதிவிட்டுள்ளனர். நரேஷின் இந்தப் பதிவில் நடிகை குஷ்பு மட்டுமே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் நரேஷ் ஏற்கெனவே மூன்று முறை திருமணமானவர். இது அவருக்கு நான்காவது திருமணம். பவித்ரா இதற்கு முன்பு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் இரண்டாவதாக கன்னட நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்தவர். இவரும் நரேஷும் கடந்த இரண்டு வருடங்களாக லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்துள்ளனர். இப்போதுதான் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நரேஷின் முன்னாள் மனைவி ரம்யா, கடந்த வருடம் மைசூரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பவித்ராவை செருப்பால் அடித்த விவகாரம் வெளியில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னரே நரேஷ், பவித்ரா காதல் விவகாரம் வெளியில் தெரிந்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours