Online Rummy Bill: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது அதை மாநில அரசிடமே திருப்பி அனுப்பிவிட்டார்.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது அதை மாநில அரசிடமே திருப்பி அனுப்பிவிட்டார். இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என் ரவி, மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி திருப்பி அனுப்பிவிட்டார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 19 மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் மசோதா கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா காலவதியான நிலையில், இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி, மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி திருப்பி அனுப்பிவிட்டார்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி மீது பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மிகப் பெரிய கருத்து வேறுபாடாக இந்த மசோதா இருந்துவந்தது குறிப்பிடத்தகக்து.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலில் அது காலாவதியாகியிருந்தது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர், சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.
ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் நேரிலும் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் ,மாநில அரசு தெரிவித்து வந்த நிலையில், ஆளுநர் ரவி மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டார்.
+ There are no comments
Add yours